2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். பேச்சின் மூலமாக வருமானங்கள் இருக்கின்றன. உங்கள் கையில் பணம், தனம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் குறித்த பேச்சுவார்த்தைகள், அக்ரிமெண்ட் போடுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்வது நல்லது. கிரகங்களும், சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக இருக்கும்போதுதான் முயற்சிகளை பெரியளவில் அதிகப்படுத்த வேண்டும். வேலை, தொழில் எதுவாக இருந்தாலும் பிளான் பண்ணி, யோசித்து செய்தால் உங்கள் இலக்கை அடைய முடியும். இந்த வாரத்தில் இறைவனுடைய அனுகிரகம் இருக்கிறது. உங்களுக்கு தோன்றாத் துணையாக இருந்து அனுகூலம் செய்வார். வாழ்க்கையில் பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கும் போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். பெரிய அளவில் பிசினஸ், சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து பிசினஸ், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை செய்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், சம்பாத்தியம், வருமானம் இருக்கிறது. உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். எந்த வேலை செய்தாலும், செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sept 2024 11:03 PM IST
ராணி

ராணி

Next Story