2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நண்பர்களை சரியாக மெயின்டைன் செய்யுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். நீண்ட நாட்களாக வீடு, இடம் மாறவும் மனை, வண்டி, வாகனங்கள் ஆகியவை வாங்கவும் யோசித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்களை வாங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. கல்வி சிறப்பாக உள்ளது. குழந்தை பாக்கியம், அவர்களால் நன்மை ஆகியவை உண்டு. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தாராளமாக செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் உண்டு. வேலையை பொறுத்தவரை மாற்றங்கள் உண்டு. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.