2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் தெய்வ அனுகூலம் இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலைகள் நன்றாக இருப்பதால் கையில் பணம், தனம், பொருள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், செலவினங்கள் இருக்கின்றன. கையில் பணம் இருக்கிறது என்பதற்காக யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். எல்லாவிதமான உறவுகளிடமும் கவனமாக இருங்கள். தேவையற்ற மனவருத்தங்கள், நிம்மதியற்ற சூழல்கள் உருவாகும். சொந்தமாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல்கள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். அரசியல் மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.
