2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒருபக்கம் தெய்வ அனுகூலம் கிடைத்தாலும், இன்னொரு பக்கம் தெய்வம் விலகி நிற்க வேண்டிய காலமாகவும் இருப்பதால் கவனமாக இருங்கள். எல்லாவற்றிலும் பொறுமை, நிதானம், கவனம் அவசியம். 8 என்றாலே தேவையற்ற விரயங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள், எதிர்பாராத கவலைகள், துன்பங்கள், வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகள் இவை அனைத்தையும் சந்திக்க வேண்டிய வாரமாக உள்ளது. அரசாங்க விஷயத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். உழைப்புக்கேற்ற வருமானங்கள் உண்டு. அதற்கு மீறிய செலவுகள் உண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். தொழிலில் லாபம் வருவது போல் இருந்தாலும் உங்கள் கையில் பணம், தனம் வருவதில் தடை இருக்கிறது. வேலையில் கவனம் செலுத்துங்கள். பார்க்கும் வேலையில் நிறைய போராட்டங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். இந்த வாரம் முழுவதும் சனி பகவான் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story