2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொறுமை, நிதானமாக இருங்கள். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். தேவையில்லாத விஷயங்கள் பற்றி பேசாதீர்கள், தலையிடாதீர்கள். அரசு தொடர்பானவற்றில் எச்சரிக்கையாக இருங்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இந்த வாரத்தில் செய்யுங்கள். 8-ஆம் இடத்தில் கிரகங்கள் அனைத்தும் இருப்பதால் ஒருபக்கம் பிரச்சினை இருந்தாலும், இன்னொரு பக்கம் எதிர்பாராத நன்மைகள், பணவரவு, பொருள் வரவும் இருக்கிறது. வருமானத்திற்கு ஏற்ற செலவுகளும் இருக்கிறது. தொழில் சுமாராக இருப்பதால் முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். மணவாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். புரொட்கசன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் பிரச்சினை, போராட்டங்கள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
