2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். திருமணம் நடைபெற நிறைய வாய்ப்புகள் உள்ளன. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலை எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்தையும், வருமானத்தையும் கொடுக்கும். தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். கணவன் - மனைவி உறவிலும் இதே நிலைதான் இருக்கிறது. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த லாபம் இருக்கிறது. விவசாயத்திலும் லாபம் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அது கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. அதனால், கொஞ்சம் காத்திருங்கள். கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகள் நன்றாக இருந்தால் கூட, தேவையில்லாதவற்றில் தலையிடாதீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இந்த வாரம் முழுவதும், பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வாழிபாடு செய்யுங்கள்.
