2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் நன்றாக உள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. காதலில் பிரச்சினைகள் இருந்தாலும், இறுதியாக வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. எதிர்பாராத செலவுகளும் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. வீடு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. உங்கள் வேலையில் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அது விஷயத்தில் கவனமாக இருங்கள். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் போன்ற அனைத்தும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, பிரச்சினை இரண்டுமே இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் கூடும். இந்த வாரம் முழுவதும் காளி மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.
