2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் தொழில் லாபத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு லாபம் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. பழைய சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலை குறித்த கவலை வேண்டாம். திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கத்தான் செய்யும். அவசரம் அவசியம் இருந்தால் தவிர லோன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருக்கும். நீண்ட தூர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். எந்தவித யூக வணிகங்களிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வாழிபாடு செய்யுங்கள்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)