2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எந்த துறையில் பணியாற்றினாலும் வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உங்களுக்கு அமையும். வராத பணங்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கு அல்லது அதில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் லாபத்தை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வருமானம் பரவாயில்லை. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு எந்தவிதமான யூக வணிகங்களிலும் முதலீடு செய்யாதீர்கள். சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பேச்சைக் குறையுங்கள். இந்த வாரம் முழுவதும், காளி மற்றும் பெண் தெய்வ வழிபாட்டை பிரதானமாக செய்யுங்கள்.