2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்ற முன்னேற்றங்களும் உண்டு. போட்டித் தேர்வுகள் குறிப்பாக அரசு வேலை தொடர்பான தேர்வுகள் எழுதியிருந்து ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்லதொரு ஏற்றம் இந்த வாரம் இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழில்முனைவோராக வரவேண்டும், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக முயற்சி செய்யுங்கள். புதிய காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். கொடுத்த பணங்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story