2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒருபுறம் வெற்றி; இன்னொருபுறம் தேவையற்ற மன வருத்தங்கள் என இரண்டும் இந்த வாரத்தில் இருக்கிறது. வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாடு செல்ல நினைத்தவர்கள் முயற்சி செய்யுங்கள். அதற்கு வாய்ப்புள்ளது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட் பெரிய அளவில் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல்கள் உள்ளன. போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். தொழில் நன்றாக உள்ளது. புதிதாக காதல் மலர வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட்டில் முதலீட்டை பார்த்து செய்யுங்கள். டிரேடிங்கில் கவனமாக இருங்கள். மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் அடக்கி வாசியுங்கள். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது. எதிரிகளை வெற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும், துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பிருந்தால் சித்தர்கள் சமாதிக்கு சென்று வாருங்கள்.

Updated On 14 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story