2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு பிரதானமாக அமையும் அல்லது எதிர்பாராத தெய்வ தரிசனம் கிட்டும். வேலை இருந்தாலும், உங்கள் வேலையை திருப்திகரமாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதனால் நீங்கள் பார்க்கும் வேலையை பொறுமையாகவும், நிதானமாகவும் பாருங்கள். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். இந்த வாரத்தில் புதிய காதல் விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் தேவையற்ற செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளைய சகோதர - சகோதரிகளை விட்டு பிரிந்து இருப்பதற்கான காலம் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய காலம். நெருங்கிய உறவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். பேச்சை குறையுங்கள். தேவையில்லாமல் யாரிடமும் பேசாதீர்கள். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அந்தஸ்து, புகழ் கூடும். தெய்வ அனுகூலத்தால் வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story