2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இறையருளால் இடம், ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்புள்ளது. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் வருமானம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. இந்த வாரத்தில் அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு, அதற்காக செலவு செய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எல்லோருடனும் பொறுமையுடனும், விட்டுக் கொடுத்தும் செல்லுங்கள். இல்லையென்றால், வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இந்த வாரம் முழுவதும், பைரவர் வழிபாடு மற்றும் பெருமாள் தரிசனம் செய்யுங்கள்.