2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இடம், வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. தொழில் சுமாராக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் குறைவு. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம், வருமானம் உண்டு. இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உருவாகும். புதிய காதல் மலரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் காத்திருங்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. எத்திர்பார்த்த செய்திகள் நன்மையாக முடியும். இருந்தாலும், இந்த வாரத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது முக்கியம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அரசு சார்ந்த விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில், வேலை எதுவாக இருந்தாலும் திருப்தியோடு செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 2 Dec 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story