2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள் இருக்கும் அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. இடம், வீடு வாங்க நினைத்தவர்களுக்கு நிறைய தடைகள் இருக்கிறது. இவற்றை வாங்குவது தள்ளிப்போனால் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். முயற்சிகள் எதுவும் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரிவோ, பிரச்சினைகளோ பெரிதாக இல்லை. வேலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். பிசினஸ் செய்தாலும், வேலை செய்தாலும் எதிலுமே திருப்தி இல்லாமல்தான் இருக்கும். அதனால், இரண்டிலுமே பொறுமை, நிதானம் அவசியம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருந்தால் கூட, குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரத்தில் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 9:32 PM IST
ராணி

ராணி

Next Story