2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். என்னவாக ஆசைப்பட்டீர்களோ, அதுவாகவே ஆக வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்துமே நன்மையாக முடியும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. சர்வீஸ் ஓரியண்டட் தொழில் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் உங்கள் துறைகளில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. அம்மாவால் ஆகவேண்டிய காரியங்கள் இந்த வாரத்தில் கண்டிப்பாக நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி, ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாமே லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், வருமானம் வருவதில் தடை இருக்கிறது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. நமது ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பு நிறைய உள்ளது. நிலுவையில் உள்ள பணங்கள் இந்த வாரத்தில் வரும். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டிலும் லாபம் வரும். ஸ்டார்ட் அப் நிறுவனம், இண்டஸ்ட்ரியல் தொடங்க நினைத்தவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். எதிர்காலத்தில் அதில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 Oct 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story