2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. நீங்கள் நினைத்தது நடக்கும்; நடப்பதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த செய்திகள் நன்மையாக வரும். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ, கரசிலோ படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் கவனமாக இருங்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் அனைவரிடமும் பொறுமையாகவும், விட்டுக்கொடுத்தும் போங்கள். இல்லையென்றால் வேலையில் நிறைய டென்ஷன், அழுத்தம், வருத்தங்கள், மறைமுகமான தொல்லைகள் உள்ளிட்ட அனைத்தையுமே நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். தேவை இல்லாமல் கடன் வாங்காதீர்கள். குறிப்பாக யாருக்கும் கடனும் கொடுக்காதீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கிறது. காதல் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தொழில் செய்பவர்களுக்கு பணம் முடங்க வாய்ப்புள்ளது. கூட்டுத்தொழில் செய்தால் உங்கள் பார்ட்னருக்காகவும் உழைக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு பக்கம் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். செல்வாக்கு கூடும். நட்பு வட்டாரம் டெவலப் ஆகும். ஆண் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பிருந்தால் சித்தர்கள் ஜீவசமாதி சென்று வாருங்கள்.

Updated On 15 Oct 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story