2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில் ஏதோவொரு விதத்தில் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு நன்மையைச் செய்வார்கள். உங்களை நீங்களே மேன்மைப்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. உங்கள் காதல் விஷயங்கள் வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு மணவாழ்க்கை நல்லவிதமாக அமையும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களுமே நன்றாக இருப்பதால் முதலீடு செய்யுங்கள். அரசியல் வாழ்க்கையும் நன்றாக உள்ளது. வேலையை பொறுத்தவரை கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. வேலையில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. உங்களுக்கு அவர்களால் பிரச்சினைகள், போராட்டங்கள், மனவருத்தங்கள், மனக்குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கும். அவசரம், அவசியம் இருந்தால் ஒழிய கடன் வாங்காதீர்கள். ஏனென்றால் கடன் வாங்கினால் பெரிய அளவில் பிரச்சினைகள், போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும். அதனால் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.
