2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. தொழில் ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். ஆனாலும், உங்களுக்கான செலவினங்களும் இருந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அந்த முயற்சிகளால் நன்மைகள் கிடைக்கும். இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால்தான் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனக் குழப்பங்களை யாராவது தீர்த்து வைப்பார்கள். அப்பா, அம்மாவால் நன்மை, அவர்களின் அன்பு, பாசம் என அத்தனையும் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங் மட்டுமின்றி பிற யூக வணிகங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, வருமானங்கள் இருக்கிறது. வேலையில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சொந்த தொழில் நன்றாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். நெருங்கிய நண்பர்களை பிரிவீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 5 Aug 2024 10:36 PM IST
ராணி

ராணி

Next Story