✕
x
2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி உண்டு. முயற்சிகள் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புது காதல் மலரும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். வருமானம் வருவதைப் போன்ற தோற்றம் இருந்தாலும் செலவீனங்களும் ஏற்படும். ஷேர் முதலீடு, ஆன்லைன் டிரேடிங் போன்றவை முடிந்தவரை வேண்டாம். கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. கலைத்துறையில் புகழ் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேய தரிசனம் மற்றும் சிவ ஸ்தலத்திலுள்ள பிரம்மாவை வழிபட ஏற்றம் ஏற்படும்.
Editor
Next Story