2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் இருப்பதால் எதிர்பாராத ஆலய தரிசனம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அதனால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களது உழைப்பு மற்றவர்களுக்குத்தான் லாபம் என்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். தொழில் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் பயப்பட தேவையில்லை. புதிய காதல் விவகாரம் ஏற்படும். கணவன் அல்லது மனைவி மூலமாக பண வரவோ, தனம் வரவோ ஏற்படும். உயர் கல்வியை தொடரலாம். வேறு அலுவலகம் மாற விரும்பினால் மாறலாம். அப்பாவின் அன்பு, ஆதரவு உண்டு. தயாரிப்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் உண்டாகும். குறிப்பாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், சிவில், கட்டுமானம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். துர்கை வழிபாடு செய்வதுடன் சித்தர்களுடைய ஜீவசமாதி சென்று வருவதும் நல்லது.

Updated On 8 Jan 2024 5:29 AM GMT
ராணி

ராணி

Next Story