2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான, நிறைவேறுவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிரக ரீதியாக இருக்கிறது. தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், குறிப்பாக ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை; விட்டுவிட்டு நடக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். குழந்தைகளுக்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய வாரமாக இருக்கிறது. குழந்தைகள் உங்களை விட்டு பிரிந்து இருப்பார்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். சம்பள உயர்வு, பணி உயர்வு, பண பலன் ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். கணவன் - மனைவி பிரிவு அல்லது இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் பிரம்ம தேவர் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sept 2024 10:56 PM IST
ராணி

ராணி

Next Story