2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் இருப்பதால் சில விஷயங்களில் துணிந்து முடிவு எடுக்க வேண்டிய காலகட்டங்களில் இருக்கிறீர்கள். எது எப்படி இருந்தாலும் முயற்சிகளை விட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். பழைய பொருட்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு குறிப்பாக, இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வியில் கவனமாக இருங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் இருக்கிறது. ஆனால், வருமானங்கள் சுமார். அரசியல் வாழ்க்கை நல்லதொரு புகழையும், அந்தஸ்தையும் கொடுக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்கள் நடக்கும். மேலும், சம்பள உயர்வு, பணி உயர்வு, மானிட்டரி பெனிஃபிட்ஸ் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அவை கிடைப்பதற்கான சூழல்கள் இந்த வாரம் இருக்கிறது. வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் மணவாழ்க்கை சுமாராக இருக்கும். சொந்த தொழில் மற்றும் ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தால் சுமாராக இருக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.