2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானங்கள் அதிகம் உண்டு. அதே அளவுக்கு செலவினங்களும் உண்டு. அதனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உள்ளன. நீண்ட நாட்களாக நிரந்தரமான இடம், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய அளவில் முயற்சி எடுத்து எதுவும் செய்யாதீர்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் கவனமாக இருங்கள். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அதேபோல் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் ஏற்றம் இருக்கும். சொந்த தொழில் சுமார். மணவாழ்க்கையை பொறுத்தவரை பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சியுங்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவனை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 8 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story