2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் இந்த வாரம் எந்த விஷயத்திலும் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்க வேண்டாம். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை பரவாயில்லை. வருமானங்கள் இருக்கும் அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. அதுதவிர ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. வீடு, இடம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால், லாபம் வருவது போன்ற தோற்றம் இருந்தாலும், பெரிதாக லாபம் இருக்காது. குறிப்பாக கிரிப்டோ கரன்சி, ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அதனால் பொறுமையாக இருங்கள். நீங்கள் தனித்துவமாக தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எவ்வளவு உழைப்பு போட்டாலும் அதற்கான அங்கீகாரம் என்பது இல்லை. சொந்த தொழில் பரவாயில்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவில் பிரிவு, அல்லது இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 2 July 2024 9:07 AM GMT
ராணி

ராணி

Next Story