2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்த வாரத்தில் நிரந்தரமாக நிலம், இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. கடன் கேட்டிருந்தால், லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்கள் காதல் விஷயங்கள் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். வேலை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. கடந்த வாரங்களில் கிடைக்காத அங்கீகாரம், இந்த வாரத்தில் நிச்சயம் கிடைக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன்-மனைவி உறவு சுமாராக உள்ளது. இருவரில் யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிசினஸ் சுமாராக இருக்கும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கும். அதற்காக தொழில் இல்லாமல் இல்லை; விட்டுவிட்டு நடக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யுங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வாரம் முழுவதும் தன்வந்திரி பகவானையும், அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.
