2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்கும். உங்களுடைய ஆசைகள் பூர்த்தியாகும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் ஏற்படும். ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள்; உங்கள் முயற்சிகள் கைகூடி வரும். ஆண் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, உறவுகளால் நற்பலன்கள் உண்டு. சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு, சூழ்நிலைகள் அமையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. எதிர்பாராத பயணம் இருக்கிறது. தொழில் லாபகரமாக இருக்கும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், சனிபகவான் மற்றும் விநாயகரை வழிபாடு செய்து வாருங்கள்.
