2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழிலுக்காக முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். தொழிலில் லாபம் வருவதுபோன்ற ஒரு தோற்றம். ஆனால், லாபம் இல்லை. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. நிரந்தரமாக இடம், நிலம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்துமே வாங்க சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உள்ளன. கல்வி பரவாயில்லை. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை வேலை இருக்கிறது. இடமாற்றம், சிறிய சிறிய மாற்றங்கள் என நிறைய இருக்கிறது. கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
