2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் அந்தஸ்து, கௌரவம், புகழ் கூடும். வெளியூர், வெளிநாடுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சொந்தமாக இடம், வீடு அனைத்தும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமூக அக்கறை கூடும். இரண்டாவது திருமணம் நடைபெறும். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன. உங்கள் வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். உங்களுடைய சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி அடையும். நினைப்பது அனைத்தும் நடக்கும். வேலையின் நிமித்தமாக எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு, எதிர்பாராத தெய்வ தரிசனம் இது அத்தனையும் உள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.
