2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒரு பக்கம் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், கூடும். இன்னொரு பக்கம் குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய வாரமாக உள்ளது. நீண்ட தூர பயணம் உள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை உண்டு. உங்கள் வேலையில் நல்ல லாபம், வருமானம் உண்டு. பணி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் இன்சென்டிவ், எதிர்பார்த்தவர்களுக்கு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆண் நண்பர்களால் ஏற்றம், முன்னேற்றம், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து ஆகியவை உண்டு. ஷேர் மார்க்கெட் போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களிலும் சுமாரான முதலீடே செய்யுங்கள். ஓரளவு லாபம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்வதுடன், முருகனையும் தரிசனம் செய்யுங்கள்.
