2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். எதிர்பாராத தெய்வ தரிசனம் உண்டு. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செல்வதற்கான சூழல் உருவாகும். பொருளாதார நிலைகள் பரவாயில்லாமல் இருக்கிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கும். இறையருள் நிறைய கிடைக்கும். எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நினைப்பது அனைத்தும் நடக்கும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் தொழில் ஆகியவற்றில் ஓரளவு வருமானம் கிடைக்கும். எதிர்பாராத பயணம், உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவையும் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை மாற்றங்கள், முன்னேற்றங்கள் உண்டு. எதிரிகளை வெற்றி கொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.
