2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், ஹார்டுவேர் ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பரவாயில்லை. தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். வேலை, வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. ஏதாவதொரு முயற்சி செய்துகொண்டே இருங்கள். ஆரம்பத்தில் உங்கள் முயற்சியில் நிறைய தடைகள் இருந்தாலும், பின்னர் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு மனக்குழப்பங்கள், தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். அவற்றையெல்லாம் ஜெயிப்பதற்கான வாய்ப்புகளை சனி பகவான் கொடுப்பார். எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. போட்டித்தேர்வுகள் எழுதினால் வெற்றி பெறுவீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் இருவருமே திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இரண்டாம் திருமணம் கைகூடி வர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், சூரிய பகவான் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.