2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புகள் உள்ளதால் முயற்சி செய்யுங்கள். பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேர வாய்ப்புகள் இல்லை. வேலை மற்றும் தொழில் நிமித்தமாக எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை இல்லாமல் இல்லை. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கும் பிரம்மா மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.