2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். போட்டித்தேர்வுகள் எழுதி இருந்தால் பாஸ் செய்வீர்கள். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடுபவர்களுக்கு நிச்சயமாக வேலைக்கான உத்தரவாதம் இருக்கிறது. கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தராவிட்டாலும், உயர் அதிகாரி உங்களை ஆதரிக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் சுமார். அதேபோல் வாழ்க்கை துணை மற்றும் கூட்டுத்தொழிலும் சுமார்தான். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. உயர்கல்வி பரவாயில்லை. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் சுமாராக உள்ளது. வருமானம் முடங்க வாய்ப்புள்ளது. பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எது எப்படி இருந்தாலும் அந்தஸ்து, கௌரவம் கூடும். இந்த வாரம் முழுவதும் அம்பாள் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Dec 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story