2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் சுமார். தொழிலில் வருமானங்கள் இருக்கும் அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் உங்களுக்கு வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. சம்பள உயர்வு, போனஸ், இன்சென்டிவ் போன்றவற்றை எதிர்பார்பவர்களுக்கு கிடைக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கடின முயற்சி எடுத்தால் முன்னுக்கு வரலாம். என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து திட்டம்போட்டு அதை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யுங்கள். கண்டிப்பாக வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க வாய்ப்புள்ளது. சொந்த இடம், வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. போட்டித் தேர்வுகள் எழுதி தற்போது ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.