2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை, வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை உண்டு. ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, சம்பள உயர்வு, முன்னேற்றம் ஆகியவை உண்டு. வேலையில் உங்களின் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, அதில் இருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. சொத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நகை, ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான சூழல்கள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. உதவித்தொகை எதிர்பார்ப்பவர்களுக்கு அது கிடைக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்தால், அது உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்றாக உள்ளது. தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்யவோ வாய்ப்புள்ளது. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். துணிந்து செயல்பட்டால் நல்லதொரு வெற்றி இருக்கிறது. பேச்சை குறைப்பது மிகவும் முக்கியம். இந்த வாரம் முழுவதும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 9:30 PM IST
ராணி

ராணி

Next Story