2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இடம், வீடு, சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. வழக்குகள் இருந்தால் அதில் இருந்து விடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதி இந்த வாரம் முடிவுகள் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்ல ஆண் வேலையாட்கள் அமைவார்கள். இந்த வாரத்தில் உங்களுக்கு பொருளாதார நிலைகள் ஓரளவு பரவாயில்லை என்பதால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தால் நல்லது. இரண்டாம் திருமணத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதால் அதற்காக முயற்சி செய்யுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பணங்கள் ஏதும் வராமல் நிலுவையில் இருந்தால் இந்த வாரத்தில் வர வாய்ப்புள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் தொழிலில் வருமானம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், சுமாராக இருக்கிறது. உங்கள் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். நல்லதொரு முன்னேற்றம் அமைய வாய்ப்புள்ளது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முழுவதும் சிவன் வழிபாடு பிரதானமாக செய்யுங்கள்.

Updated On 12 Nov 2024 12:41 PM IST
ராணி

ராணி

Next Story