2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் தெளிவாக இருந்தால் எதிர்காலம் நன்றாக அமையும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை உங்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி மட்டுமின்றி பண வரவு, பொருள் வரவு ஆகியவை இருக்கிறது. புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். குறிப்பாக மியூச்சுவல் பண்ட், டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்பவர்கள் செய்யலாம். வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பீர்கள். மணவாழ்க்கை சுமாராக இருக்கும். கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு பிரிவு, நஷ்டம் அல்லது விரயச் செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். சொந்த தொழிலும் பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 6 Aug 2024 9:38 AM IST
ராணி

ராணி

Next Story