2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களது வேலையில் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றம் ஏற்படும். பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கிடைக்கும். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். உங்களது எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும். உயர்கல்வியை தொடர விரும்புபவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரத்தில் கிடைத்துவிடும். அப்பாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். உங்களது கவுரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். சகோதர - சகோதரிகளால் நன்மை உண்டு. குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் நன்மை ஏற்படும். எதிர்பாராத ஆலய தரிசனம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், புகழ், பாப்புலாரிட்டி கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல ஏற்றமான காலம்தான். விநாயகர் வழிபாடு மிகவும் அவசியம். அதிலும் பெருமாள் வழிபாடு சிறந்தது.