2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட், எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கும். காதல் விஷயங்கள் ஏதோவொரு விதத்தில் மகிழ்ச்சி சந்தோஷத்தை கொடுக்கும். கடந்த காலங்களில் பிரேக் அப் ஏற்பட்டிருந்தால் முறிந்த அந்த காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகள் பரவாயில்லாமல் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வேலை நன்றாக உள்ளது. நீங்கள் பார்க்கும் வேலையில் போராட்டம் இருக்கிறது. வேலையில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சூழல் இந்த வாரத்தில் இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பாட்னருக்காக உழைக்க வேண்டிய வாரமாக இருக்கும். உயர் கல்வியில் தடை ஏற்படும். அப்பாவின் அன்பு, ஆதரவு தடையை மீறியும் கிடைக்கும். உங்கள் நட்பு வட்டாரம் மேம்படும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். நகை, ஆடை ஆபரணங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு கடன் வாங்கியாவது வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சொத்துக்கள் விற்பதற்குதான் வாய்ப்பு உள்ளது; வாங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. வாரம் முழுவதும் சிவன் மற்றும் பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sept 2024 10:57 PM IST
ராணி

ராணி

Next Story