2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடன் குறைவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். இயற்கையாகவே தெய்வ அனுகூலம் கிடைக்கும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதற்கு தகுந்த பொருளாதாரமும் உங்களுக்கு இருக்கும். கையில் பணம், தனம் இருக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. எதிர்பாராத பணவரவு, முன்னோருடைய சொத்துக்கள், கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக பென்ஷன், பி.எஃப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் வராமல் இருந்தால் அவை வந்து சேரும். இந்த வாரத்தை பொறுத்தவரை உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நட்பு வட்டம் பெருகும். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பேச்சை குறையுங்கள். தேவையில்லாமல் பேசாதீர்கள். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் பிரத்தியங்கரா தேவியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 8 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story