2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கிறது. பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளன. ஏதாவது ஒன்றிற்கு செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் நீங்களும் கலந்துகொள்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் ஆகியவை கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பீர்கள். புதிய காதல் மலர வாய்ப்புகள் இருந்தாலும், உங்கள் காதல் வெற்றியடைவதில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. அதனால் காதல் முறிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளன. இந்த வாரம் முழுவதும் முருகர் மற்றும் கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Jun 2024 12:13 AM IST
ராணி

ராணி

Next Story