2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கையில் பணம், தனம் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த செய்திகள் நன்மையாக வந்து முடியும். நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. தேவையில்லாதவற்றை பேசுவதை தவிருங்கள். பேச்சின் மூலமாக பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய வாரமாக உள்ளது. புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. அதற்கு தகுந்த பொருளாதார சூழ்நிலைகளும் உருவாகும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். புதிய ஆடைகள், நகை வாங்குவதற்கான வாய்ப்பு இயற்கையாகவே உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. யாரெல்லாம் வேலையில் மாற்றத்தை எதிர்பார்த்தீர்களோ, வேறு அலுவலகம் மாற நினைத்தீர்களோ முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள்; கண்டிப்பாக நல்லவிதமாகவே முடியும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் சிவனையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 1 Oct 2024 9:11 AM IST
ராணி

ராணி

Next Story