2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் என்டெர்டெயின்மென்ட், பயணம் உள்ளிட்டவை இருக்கின்றன. தெய்வ தரிசனம் அமைவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. குழந்தை வரத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்தாலும் வெற்றி பெறும். எதிர்பாராத மகிழ்ச்சி, சந்தோஷம் உங்களை அறியாமலேயே இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கடன் கொடுப்பதை தவிருங்கள். பெரிய அளவில் உடல் உழைப்பு வேண்டாம். அந்த உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இளைய சகோதரிகளால் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்துக்கள் விற்பனையாகும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை கவனம் தேவை. வேலையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும்; யாரையும் பெரிதாக நம்பாதீர்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. வாரம் முழுவதும் பொறுமையாகவும், ஒருசில விஷயங்களில் நிதானமாகவும் செயல்படுங்கள். வேறு அலுவலகம் மாற நினைத்தால் மாறலாம். வாரம் முழுவதும் அம்பாள் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Sept 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story