2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். அதற்கு முதலில் உங்கள் சோம்பேறித்தனத்தை விடுங்கள். எந்த அளவுக்கு தன்னம்பிக்கையோடு செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்புகொண்டு பேசுங்கள். நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணம் இருக்கிறது. உறவுகளால் நன்மை, மகிழ்ச்சி இருக்கிறது. எதிர்பாராத நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். விற்பனையாகாத உங்கள் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் கிடைக்கும். இறைவன் தோன்றாத் துணையாக இருந்து நீங்கள் நினைத்த ஏதோவொரு காரியத்தை நடத்தி கொடுப்பார். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்றாக உள்ளது. உங்கள் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story