2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள், செயலாக்கம் பெறும். கடன் தொல்லை இருந்தால் குறையும். தெய்வ அனுகூலம் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதற்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். தேடுதல் என்பது பெரிய அளவில் இருந்து கொண்டே இருக்கும். தமிழ் வருடப் பிறப்புக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. தொழில் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் நினைத்த அத்தனையும் கிடைக்கும். எல்லாவிதமான நன்மைகளும் உங்கள் வேலைவாய்ப்பு மூலமாக இருந்து கொண்டே இருக்கிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண் நண்பர்களால் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. பென்ஷன், பி.எஃப், கிராஜுவிட்டி வரவில்லை என்று நினைப்பவர்கள் அத்தனை பேருக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
