2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
முயற்சி ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் இருப்பதால், நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அத்தனையும் வெற்றிபெறும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் நினைத்தது நன்மையாக நடக்கும். எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் கிடைக்கும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. தேடுதல் என்பது பெரிய அளவில் இருக்கும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நற்பலன்கள் அனைத்தும் உண்டு. உங்கள் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. சம்பள உயர்வு, பணி உயர்வு, இன்சென்டிவ், போனஸ் உண்டு. இடமாற்றங்கள் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு உங்கள் துறைகளில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
