2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. நோயில் இருந்து விடுபடுவதற்கான காலம், கடன் குறைவதற்கான சூழ்நிலைகள் என இது அத்தனையும் இந்த வாரத்தில் உண்டு. நீங்கள் பிரச்சினைகளோடு இருக்கும் போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். சொத்துக்கள் வாங்க, விற்க வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். விளையாட்டுத் துறையில் இருந்தால் விருதுகள், கேடயங்கள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. திருமணத்திற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கும் பைரவரையும், பெருமாள் கோயிலில் இருக்கும் கருடாழ்வாரையும் வழிபாடு செய்யுங்கள்.
