2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய காதல் மலரும். முறிந்த காதல் மீண்டும் சேரும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். வேலை நன்றாக உள்ளது. வேலை தேடினால் வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருந்தால் பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் ஆகியவை உண்டு. போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். தொழில் பரவாயில்லை. தேவையில்லாத விஷயங்களை பேசுவது, தலையிடுவது வேண்டாம். வேலை நன்றாக உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. ஷேர் மார்க்கெட்டில் சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். யூக வணிகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 11 March 2025 9:26 AM IST
ராணி

ராணி

Next Story