2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தைக்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட், இன்ட்ரா டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் ஓரளவுக்கு பரவாயில்லை. வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது என்பதற்காக பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். சுமாரான முதலீடே ஓரளவு உங்களுக்கு ரிட்டன்ஸ் கொடுக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானங்கள், சம்பாத்தியங்கள் உண்டு. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. ஒருபக்கம் வேலை நன்றாக இருந்தாலும், இன்னொரு பக்கம் வேலையை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் வேலையில் கவனம் தேவை. நிலையாக இருக்கக்கூடிய சொத்துக்கள், இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
